Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்பான குற்றங்களை தடுப்பதற்காக கலால் திணைக்களம் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விசேட முற்றுகை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கலால் திணைக்களத்தின் ஊடக பேச்சாளரும் பிரதி கலால் ஆணையாளர் கபில் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்பான குற்றச் செயல்களை தடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதிலும் எத்தகைய இடங்களிலும் இடம்பெறும் இது தொடர்பான குற்றச் செயல்கள் தொடர்பாக 1913 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு கலால் திணைக்கள ஊடக பேச்சாளர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மோசடியான முறையில் செயற்கை கள் தயாரிப்பை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான 61 நிலையங்கள் இந்த வருடத்தில் முற்றுகை இடப்பட்டன. இவற்றிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு தண்ட பணமாக 45 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை அறவிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
32 minute ago
47 minute ago