Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2021 ஒக்டோபர் 07 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன், மாலை 5 மணிக்குப் பின்னர், போத்தலில் சிறுநீர் கழிக்கவேண்டியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ரிஷாட் பதியூதீன் எம்.பி, மாலை 5 மணிக்குப் பின்னர் மலசலக்கூடத்துக்குச் செல்லமுடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அதனால், அவர் போத்தலிலே சிறுநீர் கழிக்கின்றார். ஆகையால், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாப்பதற்க வழிவகைகளைச் செய்யுமாறு சபாநாயகரிடம் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிநின்றார்.
இதனிடையே குறுக்கிட்ட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, கடந்தகாலங்களில் தாங்களும் சிறையில் அடைக்கப்பட்டோம். அப்போதும் மாலை 5 மணிக்குப் பின்னர், போத்தல்களிலே சிறுநீர் கழித்தோம் என்றார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியூதீன் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
3 hours ago