Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 04 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது வெசாக் பண்டிகை வெற்றிகரமாக நிறைவுற்றதையடுத்து, இப்பண்டிகைக்கு அழைக்கப்பட்டிருந்த இலங்கை குழுவினர் நாடு திரும்பினர்.
இந்த விழாவில் கலந்துகொள்ள இலங்கைக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன் இக்குழுவில் பிரதியமைச்சரகளான தயா கமகே, அனுமா கமகே மற்றும் சிரேஷ்ட பௌத்த பிக்குகள், சமய புலமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துக் கொண்டனர்.
தயா கமகே, ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில் 'இலங்கைக் குழு பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட விஜயம் மற்றும் கண்காட்சி நிமித்தம் பாகிஸ்தானின் பௌத்த புனித பண்டங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை கலாசார ரீதியில் இரு நாடுகளுக்கிடையில் புதிய உறவினை உருவாக்கியிருக்கின்றது' என்றார்.
'பாகிஸ்தான் முஸ்லிம் நாடாக காணப்பட்டாலும் மிகவும் பழமைவாய்ந்த பௌத்த வரலாற்று தலங்களை சிறந்த முறையில் பாதுகாத்து பராமரித்து வருகின்றது. இவ்வாறான உயர்ந்த பௌத்த வரலாற்று தொல்பொருளியல் சொத்துக்கள் உலகளவில் பௌத்தத்தை பின்பற்றுபவர்களுக்கு காண்பிக்கப்படவேண்டும்' என சிரேஷ்ட புலமையாளர் பேராசியர்.எஸ்.பி. ஹெட்டியாராச்சி இதன்பொழுது கூறினார்.
இதேவேளை, வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானில் வெசாக் பண்டிகையினை ஏற்பாடு செய்தமைக்கு பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு இலங்கைக் குழுவினர், நன்றி தெரிவித்துள்ளனர்.
11 minute ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
6 hours ago
6 hours ago
7 hours ago