2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பேச்சுவார்த்தை தொடர்பில் தொழிற்சங்கங்கள் மழுப்பல்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.ஆ.கோகிலவாணி

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றதாக கூறப்படும் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை தொடர்பில், அதில் கலந்துகொண்டதாக கூறப்படும் தொழிற்சங்கங்கள், வெளிப்படையாக எந்தவொரு கருத்துகளையும் தெரிவிக்க மறுத்துவிட்டன.

கடந்த 17 மாதங்களாக இழுபறி நிலையில் இருந்துவரும்;இ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டதாக கூறப்படும் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை, நேற்று வியாழக்கிழமையும் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாமல் நிறைவடைந்ததாக அறியமுடிகின்றது.

நேற்றுக் காலை 11 மணிக்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் ஆரம்பமான பேச்சுவார்த்தை மாலை 3 மணிவரையும் நீடித்ததாம். கடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றகரமான நிலை காணப்பட்டதாக கூறப்பட்டதால் நேற்றை பேச்சுவார்த்தையில் கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்று எதிர்பார்த்திருந்தபோதிலும், இப்பேச்சு எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இவ்விடயம், தொடர்பில் தொழில் அமைச்சரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தொழில் அமைச்சர் முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடிவிட்டு அடுத்தக்கட்ட பேச்சுக்கு அழைப்புவிடுப்பாரென்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மீண்டுமொரு பேச்சு இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .