2025 மே 21, புதன்கிழமை

பிணையில் விடுவிக்கப்பட்ட சுங்க அதிகாரிகளுக்கு கட்டாய விடுமுறை

Kogilavani   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

12.5 கோடி ரூபாயை இலஞ்சமாகப் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சுங்கப்பிரிவு அதிகாரிகள் மூன்று பேருக்கும் கட்டாய விடுமுறை வழங்கியுள்ளதாக, சுங்கத்திணைக்கள ஊடகப்பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

சுங்க அதிகாரி சுதீர பராகிரம ஜினதாஸ, பிரதி சுங்க பணிப்பாளர் ஜகத் குணதிலக்க மற்றும் உதவி சுங்க அதிகாரி எம். டீ. யு. ஜி. பெரேரா ஆகியோருக்கே, இந்தக் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சுங்க அதிகாரிகளைப் பதவிகளிலிருந்து நீக்குவதற்கோ அல்லது ஆணைக்குழுவால் விசாரிப்பதற்கோ, அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவேண்டும் என்றும் விசாரிப்பதற்கு அனுமதி கிடைத்தால் மாத்திரமே விசாரணை செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னரே,  அவர்களை அவர்களுடைய பதவிகளிலிருந்து விலக்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், அவர்களுக்கான மாதாந்தச் சம்பளம் இடைநிறுத்தப்பட்டள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த இலஞ்சம் கொடுத்தலுடன் தொடர்புடைய பிரபல நபர்கள் குறித்து தற்போது ஆணைக்குழு விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு செலுத்தவேண்டிய 150 கோடி ரூபாய், சுங்க கட்டணத்தை செலுத்தாமல் விடுவதற்காக சுங்க அதிகாரிகள் மூவரும் 12.5 கோடி ரூபாயை இஞ்சமாக கேட்டிருந்ததாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .