2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பாண் விற்ற மூவருக்கு தண்டம்

Kanagaraj   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாண் இறாத்தல் கொண்டிருக்கவேண்டிய நிறையில், 110 கிராம் குறைந்து தயாரிக்கப்பட்ட பாண்களை விற்பனைச்செய்தோம் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட மூன்று பேக்கரிகளின் உரிமையாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அவர்கள் ஏற்றுக்கொண்டதையடுத்தே நுகேகொடை மேலதிக நீதிவானும் மற்றும் மேலதிக மாவட்ட நீதிவானுமாகிய அனுஷ்க செனவிரத்ன உத்தரவிட்டார்.

அளவீடு மற்றும் தரநிர்ணய திணைக்கள அதிகாரிகளே, பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X