Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கடந்த ஐந்து வருடங்களில், போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களுக்காக, பாடசாலை மாணவர்கள் 551 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்' என, வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, நாடாளுமன்றத்தில் நேற்றுப் பதிலளித்தார்.
இடையீட்டு கேள்விகளை எழுப்பிய புத்திக பத்திரண எம்.பி, பாடசாலைக்குள்ளும், பாடசாலைகளுக்கு அண்மையில் உள்ள வர்த்தக நிலையங்களிலும் மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் பஸ்களுக்குள்ளும் பாபுல், பீடா மற்றும் மதனமோதகம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுதொடர்பில் சோதனை நடத்துவதற்கு ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா?
போதைப்பொருள்களை விற்பனை செய்வதற்கான இடைத்தரகர்களாக பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுவையூட்டப்பட்ட பாக்கு மற்றும் குளிர்பானங்கள் பாடசாலைகளுக்கு அருகில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை தடுப்பதற்கு ஒளடத கட்டுப்பாட்டுச் சபை தலையிடுவதற்கு ஏதாவது ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்றும் வினவினார்.
இக்கேள்விகளுக்கு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாஹல ரத்னாயக்க பதிலளிக்கையில், 'போதைப்பொருட்களை, மாணவர்கள் பயன்படுத்துகின்றனரா உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தேடியறிவதற்கு, பிரஜா பொலிஸ் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதுடன் ஒளடத கட்டுப்பாட்டுச் சபை இதில் தலையிடமுடியுமா? என்பது தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும்' என்றார்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago