Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 29 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
புதிய அரசியலமைப்புத் தொடர்பில் கொழும்பு வாழ் மக்களின் கருத்துகளை உள்வாங்கும் நடவடிக்கை, கொம்பனிவீதியில் உள்ள விசும்பாயவில், கடந்த 18ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிவரை இடம்பெற்றது. இதில் 229 பேர், கருத்துத் தெரிவித்தனர் என்று, புதிய அரசியலமைப்புக்கு,
மக்களின் கருத்துக்களை உள்வாங்கும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
விசும்பாயவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இந்த ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் நேரில் சமூகமளித்து கருத்துத் தெரிவித்தவர்களைத் தவிர, மின்னஞ்சல் ஊடாக 340, தொலைநகல் ஊடாக 70, எழுத்து ஊடாக 200 கருத்துகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.
கொழும்பிலுள்ள பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், கம்பஹா, கண்டி மாவட்டங்களில் வாழும் மக்களின் கருத்துக்களை கேட்டறிதல், பெப்ரவரி முதலாம், இரண்டாம் திகதிகளில் இடம்பெறும்.
நாட்டு மக்களின் கருத்தினைப் பெற்றுக்கொண்ட பின்னர், கொழும்பில் வாழும் மக்களின் கருத்துக்களை மீண்டும் கேட்டறிவதற்கான நடவடிக்கை, விசும்பாயவிலேயே மார்ச் மாதம் ஆரம்பமாகும்.
எவ்வாறாயினும், எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையே, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்க, தமது குழுவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அன்றைய தினத்துடன் கருத்துகளைக் கேட்டறிதல் நிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த வாரம் முதல், சமூக வலைத்தளத்தின் ஊடாகவும் மக்களின் கருத்துக்களை கேட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அது தொடர்பாக விவரங்கள் www.yourconstitution.lk என்ற தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago