Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 பெப்ரவரி 10 , பி.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.பாருக்தாஜுன்
குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 14 பேர், புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவதற்கு மறுத்துள்ளனர்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, இந்த மறுப்பை அவர்கள் வெளியிட்டனர்.
ரீ.பாருக்தாஜுன்புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவதே, இவ்வழக்கினை முடிவுக்குக் கொண்டுவரும் முறையாக அமையுமென, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
எனினும், சந்தேநபர்கள் சார்பாக ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கே. இரத்தினவேல், குறித்த நபர்கள் அப்பாவிகள் எனவும், புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட அவர்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்தனர்.
மேலும், அவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கு சட்டத்துறையினர் தொடர்ந்தும் வற்புறுத்தினால், அதற்குப் பதிலாக, அவர்களது குற்றமிலாத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, வழக்கை அவர்கள் எதிர்கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீதவான், புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட அவர்கள் விரும்பவில்லையெனில், அவர்களை அவ்வாறு புனர்வாழ்வுக்கு அனுப்ப முடியாது எனத் தெரிவித்ததோடு, அவர்கள் மீதான வழக்கைத் தொடர்வதே தனக்குள்ள ஒரே வழி எனவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த வழக்கின் ஆரம்பத்திலேயே புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட அவர்கள் சம்மதித்திருந்தால், அவர்கள் இப்போது தமது புனர்வாழ்வுக் காலத்தைப் பூர்த்தி செய்திருப்பார்கள் எனவும் நீதவான் சுட்டிக்காட்டினார்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago