2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பிரமுகர்களின் வாகனங்கள் தொடர்பில் சட்டம் அமுல்படுத்தப்படும்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து விதிகளுக்கு கட்டுப்படாமல் பயணிக்கும் பிரமுகர்களின் வாகனங்கள் தொடர்பில் வாராந்தம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுதந்திர சதுக்கத்தில் இன்று வியாழக்கிழமை (01) முற்பகல் நடைபெற்ற 'கவனமாக சென்று வாருங்கள்' எனும் தேசிய வீதிப் பாதுகாப்பு நிகழ்ச்சிக்கு இணைவாக நடைபெறும் தேசிய வீதிப் பாதுகாப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாத அச்சுறுத்தலில்லாத இந்தக் காலத்தில் முறையின்றி பயணிக்கும் வாகனங்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துதல் தொடர்பிலும் அவ்வாறான வாகனங்களில் பயணிப்பவர்கள் பிரமுகர்கள்தானா என்பது தொடர்பாகவும் கவனித்துப் பார்க்கவேண்டும். குறித்த அறிக்கையைப் பொலிஸ் மா அதிபர் வழங்கியவுடன் அது தொடர்பாக ஆராய்ந்து பார்த்து உரிய தரப்பினரை வரவழைத்து தனிப்பட்டமுறையில் அவர்களுடன் கலந்துரையாடப் போவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .