2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பாரம்பரியங்கள் பாதுகாக்கப்படும்

Princiya Dixci   / 2015 நவம்பர் 18 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கலாசார பாரம்பரியங்களை பாதுகாக்கும் செயற்றிட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் தலைவர் பேராசிரியர் பிரசாந்த குணவர்தன தெரிவித்துள்ளார். 

அவர் தெரிவித்துள்ளதாவது, 'வட மாகாணத்தில் கலாசார பாரம்பரியங்களை பேணுவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் டிசெம்பர் மாதத்திலிருந்து முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், தேசிய சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கும் அதற்கான களத்தை உருவாக்கிக் கொடுப்பதற்குமான செயற்றிட்டமாக இது அமையும் எனத் தெரிவித்துள்ளார். 

அத்துடன், 'மத, இன மற்றும் சமூக செயற்பாடுகளின் வளர்ச்சிக்கும் வரலாற்றுப் பதிவுக்கான முயற்சிகளுக்கும் இத்திட்டம் உதவியாக அமையும். வட மாகாணத்தில் கந்தரோடை மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகள் வரலாற்றுக் குறிப்புகள் சார்ந்த சான்றுகளாகவும், கிழக்கு மாகாணத்தில் திரியாய பௌத்த மத்திய நிலையம் மற்றும் சிவன் கோயில் ஆகியன கலாசாரம் சார்ந்த சான்றுகளாகத் திகழும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், 'இன, மத மற்றும் சமூக வளர்ச்சியையும் சுற்றுலாப் பயணிகள் வருகையையும் அதிகரிப்பதற்கு இத்திட்டம் ஒரு  களமாகவும் அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .