Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 29 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவிதா சுப்பிரமணியம், வி.நிரோஷினி
இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைக்கு, உள்ளக விசாரணை மூலமே தீர்வு காணப்படும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஜெனீவா பரிந்துரைகள் தொடர்பில், தெளிவானதொரு நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கிறது. அதாவது, போர்;க் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைக்குத் தேவையேற்படின், சர்வதேச நீதிபதிகளின் உதவி கோரப்படும் எனினும், இவ்விவகாரம் தொடர்பில் உள்ளக விசாரணை மூலமே தீர்வு காணப்படும் எனும் நிலைப்பாட்டில், தொடர்ந்தும் உறுதியாக இருக்கின்றது. இதனை நாம், சர்வதேசத்திடமும் தெரிவித்துவிட்டோம்.
மேலும், உள்ளக விசாரணைக்காக, தொழில்நுட்ப மற்றும் நிபுணர் உதவிகளை, சர்வதேசத்திடமிருந்து பெற்றுக் கொள்வோம்.
இந்நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள், இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்துவதானது, அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும் என்றார்.
தேவையேற்படின், எமது விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளின் உதவியை பெற்றுக் கொள்ளவோம். உதவி கோருவதால், இது சர்வதேச விசாரணையென ஆகிவிட முடியாது என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .