Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் இறுதிப் பகுதியில், இராணுவத்தினரால் போர்க் குற்றங்கள் இழைக்கப்பட வில்லையென, பாதுகாப்பமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
'சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம்ƒ படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து' எனக் கோரி,
ஆரம்பிக்கப்பட்டுள்ள கையெழுத்து வேட்டை நிகழ்வில் கலந்து கொண்டு, கையெழுத்திட்ட பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டு தமிழ் சக்திகளைத் திருப்திப்படுத்த, படையினருக்கெதிராக போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக, இதன்போது அவர் குற்றஞ்சாட்டினார்.
அத்தோடு, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனின் இலங்கை விஜயத்தையும் இலங்கையில் அவர் சந்திக்கும் மக்கள் தொடர்பாகவும், கோட்டாபய கேள்வியெழுப்பினர். அதிகாரிகளால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு சிலரை மாத்திரமே, உயர்ஸ்தானிகர் சந்தித்ததாக, அவர் இதன்போது குறிப்பிட்டார்.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago