2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புராதன சின்னங்களைக் கொண்டு ‘நல்லாட்சி விளையாடுகிறது’

Gavitha   / 2017 ஜனவரி 02 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூ.எல்.மப்றூக்

“நல்லாட்சியின் ஒரு பகுதியினருக்கு, பௌத்த சிங்கள உணர்வூட்டலை அரசியல் ஆயுதமாகக் கையில் எடுக்க வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளது” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். 

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போல், மதம் சார்ந்ததாக இவ்வுணர்வூட்டல் அமையக்கூடாது என்று, நல்லாட்சியினர் விரும்புவதாகவும் எனவே, வடக்கு - கிழக்கில் வாழும் சிங்களவர்களின் நில, மத மற்றும் இன அடிப்படையிலான உரித்துகள் தொடர்பானதாக இந்த உணர்வூட்டலை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் எனவும், அவர் குறிப்பிட்டார். 

இதனை நிறைவேற்றுவதற்காக, சிறுபான்மையினரின் வாழ்விடங்களை இலக்கு வைத்து, அங்கு பௌத்த புராதன சின்னங்களைக் கண்டுபிடிக்கும் ஒரு லாவக விளையாட்டினை மேற்கொண்டு வருதாகவும் தவிசாளர் பஷீர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தற்போது, நீண்ட காலத்தின் பின்னர் பௌத்த தீவிரவாத அமைப்பினரும், சில பொறுப்பளிக்கப்பட்ட அமைச்சர்களும் பௌத்த வரலாற்று எச்சங்களைத் தேடி கிழக்கைக் கிண்ட ஆயத்தமாகி வருகின்றனர்” என்று, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .