2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பீரிஸுக்கு எதிராக விசாரணை?

Kogilavani   / 2016 நவம்பர் 25 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிவிவகார, அமைச்சுக்கென 2010 - 2015ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் ஒதுக்கப்பட்ட நிதியை, வரையறையின்றிச் செலவிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழே, அவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிமுடிகின்றது.  

பேராசிரியர் பீரிஸ், வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கிடைத்த முறைப்பாட்டின் பேரில், மேற்படி விசாரணையை ஆரம்பிக்க நேற்று வியாழக்கிழமை தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அத்தகவல்கள் தெரிவித்தன.   

வெளிவிவகார அமைச்சுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை, முறையான அனுமதி மற்றும் செயன்முறையின்றி வெளிநாட்டு பயணங்களுக்காக பயன்படுத்தியமை, வெளிவிவகார அமைச்சினால் செலவிடப்பட முடியாத நபர்களுக்கு விமான பயணச்சீட்டு பெற்றமை, விமானங்களை நிறுத்திக் காத்துக்கொண்டிருக்கச் செய்வதற்காகக் கட்டணம் செலுத்தியமை மற்றும் இராஜதந்திரப் பதவி சிறப்புரிமைகளுக்குள் அடங்காத விடயங்களுக்கு அமைச்சின் பணத்தை செலவிட்டமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.   

அத்துடன், பேராசிரியர் பீரிஸ், வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த 5 வருட காலப்பகுதியில் அமைச்சில் மேற்கொள்ளப்பட்ட பெரியளவிலான அனைத்து செலவுகள் பற்றியும் விரிவான தகவல் 10 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சகல பிரிவுகளினதும் பிரதானிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .