2025 மே 21, புதன்கிழமை

புலிகள் இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் இருவரையும் ஜனவரி 19ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி ரேமா ஸ்வணாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா இராணுவ கஜபா படையணியின் கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட 8 பேர் பயணித்த ஜீப்பின் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அவர்களை படுகொலைச்செய்தனர் என்று அவ்விருவர் மீதும்  அதிகுற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றது.

வில்பத்து தேசிய வனாந்தரத்தில் வைத்தே அவ்விருவரும் இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.  இந்த வழக்கை ஜனவரி 18,19 மற்றும் 20ஆம் திகதிகளில் விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .