2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

போலி சான்றிதழ்களை காட்டிய பெண் ஊழியருக்கு விளக்கமறியல்

George   / 2016 நவம்பர் 20 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி கல்விச் சான்றிதழ்களைக் காட்டி, 24 வருடங்களாக அரச சேவையில் கடமையாற்றிய பெண், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பதுளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான், ஆனந்த மொரகொடவின் உத்தரவுக்கு அமைய,  அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊவா மாகாணத்​திலுள்ள பிரதேச செயலாளர் அலுவலகமொன்றில் தொழில்நுட்ப உத்தியோகத்தார கடமையாற்றிய 59 வயது பெண்ணே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நிரந்தர நியமனம் வழங்குவதற்காக மேற்​கொள்ளப்பட்ட பரசீலனையின்போது,  அவர் போலிச் சான்றிதழ்களை ஒப்படைத்திருந்த விடயம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .