Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 19 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
01. விபத்தில் ஒருவர் பலி
மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்கொட் மாவத்தை மக்கள் வங்கிக்கு அருகில் சனிக்கிழமை மாலை 6.10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரொன்று வீதியின் வலது புறமாக திருப்ப முற்பட்ட போது மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 25வயதான ராஜரத்னம் என்பவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
02. ஹெரோய்னுடன் நால்வர் கைது
7கிராம் 702 மில்லி ஹெரோய்னை தம்வசம் வைத்திருந்த 4 சந்தேகநபர்களை சனிக்கிழமை(18) காலை 9.40 மணிக்கும் மாலை 7.40 மணிக்குமிடையிலான காலப்பகுதியில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்குளி, மதுரங்குளி, அங்குலான மற்றும் சீதுவ பகுதிகளில் வைத்தே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்குளி
மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமித்புர பிரதேசத்தில் 1 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோய்னுடன் 54 வயதான சமித்புர பிரதேசத்தைச் சந்தேகநபரொருவரை சனிக்கிழமை(18) காலை 9.40 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி பிரதேசத்தில் 2 கிராம் 02 மில்லிகிராம் ஹெரோய்னுடன் 53 வயதான கல்பிட்டி, பள்ளிவாசல் துறை பிரதேசத்தைச் சந்தேகநபரொருவரை சனிக்கிழமை (18) பிற்பகல் 2.40 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்குலான
அங்குலான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவட்ட வீதி பாலத்துக்கருகில் வைத்து 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ரத்மலான பிரதேசத்தைச் சந்தேகநபரொருவரை சனிக்கிழமை (18) மாலை 7.40 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்குலான பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சீதுவ
சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவத்த ரயில் கடவைக்கு அருகில் வைத்து 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஜா-எல பிரதேசத்தைச் சந்தேகநபரொருவரை சனிக்கிழமை (18) பிற்பகல் 3.30 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
03. கொள்கைகளுடன் தொடர்புடையவருக்கு விளக்கமறியல்
கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவரை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அளுத்கடை நீதவான், சனிக்கிழமை (18) உத்தரவிட்டுள்ளார்.
வீடு உடைத்து கொள்ளை மற்றும் 9 கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய வெலிக்கட முத்கமுவ வீதியைச்சேர்ந்த 37 வயதான சந்தேக நபரொருவரை வெள்ளிக்கிழமை(17) இரவு 7மணியளவில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
நாவல றோயல் கார்டன் மற்றும் றோயல் கோர்ட் பகுதிகளிலுள்ள வீடுகளில் குறித்தநபர் கொள்ளையடித்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, இரண்டரைப் பவுண் தங்கநகை, டிஜிட்டல் கமெரா, அலைபேசி மற்றும் 300 அமெரிக்க டொலர்கள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அவரை அளுத்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
04. நிபந்தனைகளை மீறி மதுபான விற்பனை: ஒருவர் கைது
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கடைவீதியிலுள்ள உல்லாச ஹோட்டலொன்றில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மதுபானங்ளை விற்பனை செய்த ஒருவரை அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய பொலிஸார், சனிக்கிழமை(18) கைதுசெய்துள்ளனர்.
28 வயதான சந்தேக நபரொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அந்த ஹோட்டலிலிருந்து 479 மதுபான போத்தல்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் குறித்த உல்லாச ஹோட்டலின் முகாமையாளரென பொலிஸார் தெரிவித்தனர்.
750 மில்லிலீற்றர் கொள்ளவுடைய உள்நாட்டு மதுபான போத்தல்கள் 92, 750 மில்லிலீற்றர் கொள்ளவுடைய வெளிநாட்டு மதுபான போத்தல்கள் 26, 350 மில்லிலீற்றர் கொள்ளவுடைய உள்நாட்டு மதுபான போத்தல்கள் 120, 180 மில்லிலீற்றர் கொள்ளவுடைய வெளிநாட்டு மதுபான போத்தல்கள் 139 மற்றும் 102 பியர் போத்தல்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago