2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பொலிஸ் பதிவேடு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உண்டியல் திருடியவர் கைது

மல்வான, உலஹிடிவலயிலுள்ள ரஜகஹாவத்த பள்ளிவாயலில் உள்ள உண்டியலை திருடினார் என்ற சந்தேகத்தின் பேரில், இளைஞனொருவனை பியகம பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (08) கைது செய்துள்ளனர்.  

கடந்த சனிக்கிழமை (06) அன்று குறித்த பள்ளிவாயலுக்குள் நுழைந்த சந்தேக நபர் உண்டியலை திருடியுள்ளதுடன், அதிலிருந்து பணத்தைக் கொண்டு 4,500 ரூபாய் பெறுமதியுடைய அலைபேசியொன்றை கொள்வனவு செய்துள்ளார்.

அவரிடமிருந்த அலைபேசியை கைப்பற்றியுள்ள பொலிஸார், சந்தேக நபரை மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

நீச்சல் தடாகத்திலிருந்து காவலாளியின் சடலம் மீட்பு

காலி, இமதூவ பிரதேச சபையில் காவலாளியாக பணியாற்றி வந்த நபரொருவர், ஒரு தனியார் விருந்தினர் விடுதியிலுள்ள நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அஹங்கம, தித்தகல்ல பகுதியைச் சேர்ந்த மெதிவலகே தர்மசேன (வயது 54) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (06) நண்பர்களுடன் இணைந்து, குறித்த விருந்தினர் விடுதியில் மது அருந்திய குறித்த நபர், அங்கிருந்த நீச்சல் தடாகத்தில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை இமதூவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வழிப்பறி கொள்ளையர் கைது

தங்கச்சங்கிலிகளை வழிப்பறி செய்வது உள்ளிட்ட பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் வெகு நாட்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர், நேற்று திங்கட்கிழமை (08) ரத்தொலுகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த ரசிக சமிந்த (வயது 38) என்ற சந்தேக நபர், மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்குள் சுமார் 50 தங்கச்சங்கிலி கொள்ளைச் சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் இவர் கொள்ளையடிக்கும் தங்கச்சங்கிலிகளை, தனியார் வங்கிகளில் அடகு வைப்பதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர் கைது

15 வயது சிறுமியை கடத்திச் சென்று, குடும்பம் நடத்திய இளைஞனை, களுத்துறை, தொடங்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமியும் இளைஞனும் கணவன், மனைவியாக, இளைஞனது பெற்றோரின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.

கர்ப்பிணியான குறித்த சிறுமியை, குடும்ப சுகாதார உத்தியோகத்தரிடம் அழைத்துச் சென்ற போது, சிறுமிக்கு தற்போது 15 வயது என்றும் சட்டவிரோதமான முறையில் குடும்பம் நடத்தி வருகின்றமை குறித்தும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் குடும்ப சுகாதார உத்தியோகத்தரால், பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .