Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஓகஸ்ட் 06 , மு.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு முகங்கொடுத்துள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் செயற்பாடுகளில் அமெரிக்கா ஆதரவை வழங்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
கம்போடியாவில் இடம்பெற்றுவரும் ஆசியான் மற்றும் இந்திய அமைச்சர் மட்ட மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனுடன் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தார். புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் குறித்து இதன்போது கலந்துரையாடியுள்ளதுடன், பொருளாதார மீட்சிக்கு இலங்கை எடுக்கும் முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு முகங்கொடுத்துள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் செயற்பாடுகளில் அமெரிக்க ஆதரவை வழங்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை அதிகரிக்க அமெரிக்காவின் தொடர்ச்சியான முயற்சிகளை வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நாடுகளுடன் நிதி ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago