Editorial / 2026 மார்ச் 08 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த 59 வயதுடைய சோமசுந்தரம் அரிச்சந்திரன் என்பவர், சின்னப்புல்லுமலை கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வந்த நிலையில், சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தோட்டத்தில் உள்ள வாடியில் உறங்கிக்கொண்டிருந்தபோது வந்த யானை, வாடியை உடைத்துள்ளது. அங்கிருந்து தப்பியோட முயன்ற அரிச்சந்திரனை துரத்திச் சென்று தாக்கிய யானை, அவரது முகத்தில் மிதித்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார். அவரது சகோதரி சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.
கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தைப் பார்வையிட்டார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக உடல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .