2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாள்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 02 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் வியாழக்கிழமை (02) காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் இந்திய துணைத்தூதர் சாய் முரளி , வடமாகாண பிரதம செயலாளர் மு.தனுஜா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாநகர பிரதி முதல்வர் இ.தயாளன்,யாழ் மாநகர ஆணையாளர் கிருஷ்ணசந்திரன் மற்றும் சமய சமூக பிரதிநிதிகள்,இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது காந்தீயம் ஏடு வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் பிரதி அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

இதே வேளை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் துவிச்சக்கர வண்டி பவனியொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

நிதர்சன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X