2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மகனை ஆற்றில் வீசிய தாய்

Editorial   / 2022 ஜூன் 16 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது ஐந்து வயதான மகனை ஆற்றில் வீசிவிட்டு, தானும் ஆற்றில் குதிக்க முயன்ற 42 வயதான தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வத்தளை பொலிஸ் பிரிவில்,கதிரான பாலத்தில் வைத்தே தனது ஐந்து வயதான மகனை அந்தப் பெண், ​நேற்று (15) இரவு வேளையில் களனி கங்கையில் வீசியுள்ளார்.

அந்தத் தாயின் செயற்பாட்டில் சந்தேகமடைந்த பிரதேசவாசிகள், அந்தத் தாயைப் பிடித்து, அருகிலுள்ளள வீதிச் சோதனை சாவடியில் கடமையிலிருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதன்பின்னர் மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தி, குறித்த ​சிறுவனை தேடும் முயற்சியில் பிரதேசவாசிகள் ஈடுபட்டிருந்தனர் எனினும், அம்முயற்சி கைகூடவில்லை.

சிறுவன், வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்றும், அந்தப் பெண், சிறுவனின் தாயார் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடற்படையினரின் உதவியுடன் அந்த சிறுவனைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த பொலிஸார், அந்தத் தாயை கைது செய்து தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்திவருவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட அந்தத் தாயை, வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .