2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

மகனை கொலை செய்த தந்தை தலைமறைவு

Freelancer   / 2024 செப்டெம்பர் 12 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொருபன பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மகன் மற்றும் மனைவியை தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதில் அவரது மகன் உயிரிழந்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (11) காலை குடும்ப தகராறு முற்றிய நிலையில் கணவன் தனது மனைவி மற்றும் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ரத்மலானை பொருபனை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X