R.Tharaniya / 2025 நவம்பர் 16 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவராவார்.
தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குடும்பத்தில் 3 வது பிள்ளையாக இருக்கும் 14 வயது மதிக்கத்தக்க இம்மாணவியை அவரது தந்தை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய நீலாவணை பொலிஸாருக்கு சனிக்கிழமை (15) அன்று மாலை பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவியை கல்முனையில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கடல்தொழில் மேற்கொண்டு வருவதுடன் மாணவியின் தாயார் நெசவு தொழிலை மேற்கொண்டு வருபவராவார்.
மேலும் கைதான சந்தேக நபர் குறித்து மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .