Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாநிலங்களில் மேகவெடிப்பால் ஏற்பட்ட மழை (வழக்கத்திற்கு மாறான பெரும் மழையை மேக வெடிப்பு என்பார்கள்) வெள்ளத்தில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹிமாச்சல பிரதேசம் மற்றும் அதன் அண்டை மாநிலமான உத்தரகாண்டில் மேகவெடிப்பு ஏற்பட்டு, கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் தெஹ்ரி, ஹரித்வார், ரூர்க்கி, சமோலி, டேராடூன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், தெஹ்ரி மாவட்டம் ஞானசாலியில் வீடு இடிந்து விழுந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், சார்தாம் யாத்திரை செல்பவர்கள் பயன்படுத்தும் முக்கிய பாலம் இந்த கனமழையால் சேதமடைந்த நிலையில், அதை சீரமைக்க 4 முதல் 5 நாட்களாகும் என்று தெஹ்ரி கலெக்டர் மயூர் தீக்ஷித் தெரிவித்துள்ளார்.
இதேபோல, ஹிமாச்சலில் சிம்லா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், ராம்பூர் பகுதியில் 36 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கடும் மழைக்கு மத்தியில், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக ராம்பூர் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.S
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago