2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

’மக்களிடம் கோருவதற்கு அரசுக்கு உரிமையில்லை’

Freelancer   / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களைத் தியாகம் செய்யுமாறு கோரிக்கை விடுப்பதற்கு அரசாங்கத்துக்கு உரிமை இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்த தருணத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரு நிபுணர் குழுவை நியமிக்க அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மக்களை தியாகம் செய்ய அரசுக்கு நியாயமான உரிமை இருக்கிறதா என்று சூம் தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே மேற்கண்ட பதிலை வழங்கினார்.

உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனாவைக் கட்டுப்படுத்த நிபுணர் குழுவை நியமிக்க அழைப்பு விடுத்தது என்றும் இலங்கையைத் தவிர அனைத்து நாடுகளும் அந்த கோரிக்கையை நிறைவேற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X