2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மக்களுக்கு பொய் கூற விரும்பவில்லை

Freelancer   / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான் மக்களுக்கு பொய் கூறி என்னை சிறுமைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அதனைக் குறைப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதென ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,

“நான் மக்களுக்கு பொய் கூறி என்னை சிறுமைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. விலைகளை என்னால் குறைக்க முடியும் என்றால் நான் குறைக்காமல் இருப்பேனா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி வரை அரிசி உள்ளிட்ட 50 அத்தியாவ சிய பொருட்களை சதொச மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .