2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு இன்று என்ன நடக்கும்?

Menaka Mookandi   / 2016 நவம்பர் 10 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவதும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 70ஆவதும் வரவு - செலவுத் திட்டம், இன்று வியாழக்கிழமை (10), நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால், 2017ஆம் ஆண்டுக்கான இந்த வரவு - செலவுத் திட்டம் மீதான வாசிப்பு, பிற்பகல் 2 மணிக்கு, இடம்பெறும்.

கடந்த மாதம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைய, 2017ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவு 1 இலட்சத்து 80 ஆயிரத்து 900 கோடி ‌ரூபாயாகும். அந்தச் செலவுக்கான நிதியைத் திரட்டிக்கொள்ளும் விவரம் தொடர்பில், இந்த வரவு - செலவுத் திட்டத்தின் போது அறிவிக்கப்படவுள்ளது.

பொதுமக்களின் கருத்துக்கள், ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டே, இந்த வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவே, நிதியமைச்சர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதன்மூலம், பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியாக்கப்படும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு - செலவுத் திட்டத்தின் மூலம், புதிதாக எதையும் எதிர்ப்பார்த்துவிட முடியாது என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .