2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

முன்னாள் (டிஐஜி) பிரியந்த ஜெயக்கொடிக்கு பிணை

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வுபெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்பிரியந்த ஜெயக்கொடிக்கு மஹர நிதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த குற்றவாளியான கெஹல்பத்தர பத்மே தனக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் பொலிஸாரிடம் அளித்த பொய்யான முறைப்பாடை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிரியந்த ஜெயக்கொடியை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நடத்திய விசாரணையில்  பிரியந்த ஜெயக்கொடி தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் பொய்யாக முறைப்பாடு அளித்துள்ளமை தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X