2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

மலேரியா தொற்றால் யாழில் ஒருவர் மரணம்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 10 , பி.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். போதனா வைத்தியசாலையில் மலேரியா தொற்றால் ஒருவர் உயிரிழந்ததாக, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

சில நாட்களுக்கு முன் கொங்கோ நாட்டிலிருந்து நாடு திரும்பியிருந்த நெடுந்தீவை சொந்த இடமாகக் கொண்ட 34 வயதுடைய நபர், கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

கடுமையான நோய் நிலையுடன் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, கடந்த 6 நாட்களாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் கடுமையான தொற்று மற்றும் பல்வேறு அங்கங்களின் செயற்பாட்டு இழப்பால் நேற்றைய தினம் அவர் உயிரிழந்தார். 

வைத்திய பரிசோதனைகளின் அடிப்படையில், அவர் மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X