2025 ஜூலை 05, சனிக்கிழமை

மங்களவிடமிருந்து வரி நிவாரணம்

Editorial   / 2019 ஜனவரி 11 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு வருவாய்ச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்கள் காரணமாக, பொதுமக்களுக்கு, பல்வேறு வரிச் சலுகைகளை அளிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.   

அந்த வகையில், அரசாங்கப் பத்திரங்கள் மீதான முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு விதிக்கப்படும் இருப்பு வரி நீக்கப்படுகிறது.

அத்துடன், மாதமொன்றுக்கு 50 ஆயிரத்துக்கு அதிகப்படியாக சம்பளம் பெறுவோரிடம் அறவிடப்பட்ட, கட்டணங்கள் மற்றும் ஏனையவற்றின் மீதான நிறுத்தி வைத்தல் வரி நீக்கப்பட்டுள்ளதுடன், அது வருடத்துக்கு அதிகபட்சம் 5 இலட்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.   

வாடகை வருமானம் மீதான வரி விலக்கு, 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, 18 வயதுக்குக் குறைவான சேமிப்பு மற்றும் நிலையான கணக்குகளுக்கு அறவிடப்பட்ட நிறுத்தி வைத்தல் வரி நீக்கப்பட்டுள்ளது.   

2019/04/01 தொடக்கம், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளிடமிருந்து அறவிடப்பட்ட வருமான வரி, அதிகபட்சம் 14 சதவீதமாகும். சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக் கணக்குகளுக்காக அறவிடப்பட்ட நிறுத்தி வைத்தல் வரி எல்லையானது, 150,000 இலிருந்து 300,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.   

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் வர்த்தக வங்கிகளில் ​பேணப்பட்டுவரும் NRFC மற்றும் RFC கணக்குகளுக்காக அறவிடப்பட்ட நிறுத்தி வைத்தல் வரி, 2018/11/15ஆம் திகதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.   
வெளிநாட்டில் ஈட்டிய பணத்தை இலங்கைக்கு அனுப்பும் போது பெறப்பட்ட வருமான வரி, 2018/11/15ஆம் திகதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதென, அமைச்சர் சமரவீர, தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .