Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 10 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35, வது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாற்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் செவ்வாய்க்கிழமை (9) அன்று மாலை சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி,பனிச்சையடி போன்ற பிரதேசங்கள் இராணுவத்தினர் மற்றும் ஊர்காவல்படையினர் சுற்றிவளைத்து அங்கிருந்த குழந்தைகள் பெண்கள் உட்பட 186 பேரை போயிஸ் ரவுண் இராணுவ முகாம் பகுதிக்கு அழைத்து சென்று அவர்களை வெட்டியும் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்து யர்கள் போட்டு எரித்தனர்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நினைவு தூபியில் இடம்பெற்றது இதில் மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,முன்னாள் மாநகர சபை முதல்வர் ரி.சரவணபவன், மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து 4 கிராமங்களை சேர்ந்த 4 பேர் ஒன்றிணைந்து பொது சுடர் ஏற்றிய இதையடுத்து அங்கிருந்த அனைவரும் சுடர் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வர்களின் ஆத்மசாந்தி வேண்டி மலர்தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் படுகொலை செய்யப்பட்ட இராணுவ முகாம் அமைந்திருந்து பகுதியை அகழ்வு பணி முன்னெடுக்குமாறு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்தனர்.
கனகராசா சரவணன்
34 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
1 hours ago