2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மோடி - இமானுவேல் மெக்ரான் தொலைபேசி உரையாடல்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி​ரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்​ரான், பிரதமர் நரேந்​திர மோடியை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசி​னார்.

உக்​ரைன் போரை நிறுத்​து​வது தொடர்​பாக கடந்த 15 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்​பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் அமெரிக்​கா​வில் சந்​தித்​துப் பேசினர். இதைத் தொடர்ந்து கடந்த 18 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்​பை, உக்​ரைன் ஜனாதிபதி ஜெலன்​ஸ்கி சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்​ரான் உட்பட ஐரோப்​பிய தலை​வர்​கள் உடன் இருந்​தனர்.

இந்த சூழலில் பிரான்ஸ் ஜனாதிபதி மெக்​ரான், பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று முன்​தினம் தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசி​னார். அப்​போது உக்​ரைன் போர் மற்​றும் காசா போர் குறித்து இரு தலை​வர்​களும் ஆலோ​சனை நடத்​தியுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X