Freelancer / 2026 ஏப்ரல் 20 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் வேட்பாளராக போட்டியிடுகிறார். திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட விமானநிலையம் வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை, கொட்டப்பட்டு பகுதிகளில் வீதி வலத்தில் பங்கேற்று நேற்று வாக்குசேகரித்தார்.
விமான நிலையத்திலிருந்து தனது பிரத்யேக பிரச்சார வானில் ஏறி வெளியே வந்த விஜய், வான் மீது நின்றபடி விசில்அடித்து, கையசைத்து வாக்கு சேகரித்தார். வயர்லெஸ் வீதியில் வீதி வலம் சென்றபோது, அங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்துக்குச் சென்று தரையில் மண்டியிட்டு சிறிது தொலைவு சென்று ஜெபம் செய்தார்.
பின்னர், வானில் ஏறி வீதி வலம் சென்ற விஜய், வானில் முன்னாள் அமைச்சரும் லால்குடி தொகுதி த.வெ.க. வேட்பாளருமான கு.ப.கிருஷ்ணனை ஏற்றிக் கொண்டு வாக்கு சேகரித்தார். கே.கே.நகர் பகுதியில் உள்ள நூருல் ஹுதா பள்ளிவாசலுக்குச் சென்று அதன் தலைவர் மோத்தி ஹாஜியாரை சந்தித்து, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். (a)

2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago