Freelancer / 2026 பெப்ரவரி 05 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மணிப்பூர் முதல்வராக பா.ஜ.கவின் யும்நம் கேம்சந்த் சிங் நேற்று மாலை பதவியேற்றார். அவருடன் இருவர் துணை முதல்வர்களாகவும், ஒருவர் அமைச்சராகவும் பதவியேற்றனர்.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள யும்நம் கேம்சந்த் சிங் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர். துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள நெம்சா கிப்ஜென் குகி சமூகத்தைச் சேர்ந்தவர். மற்றொரு துணை முதல்வரான லோசி திக்கோ, நாகா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவர்களோடு, கோவிந்ததாஸ் கொந்தவ்ஜம் என்பவர் மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய 61 வயதான முதல்வர் யும்நம் கேம்சந்த் சிங்,
மணிப்பூரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான ஒரு பெரிய பொறுப்பை பா.ஜ.க. தேசிய தலைமை எனக்கு வழங்கியுள்ளது. நாங்கள் அனைத்து சமூகத்தினரின் விருப்பங்களையும் நிறைவேற்றியுள்ளோம். இனியும் நிறைவேற்றுவோம் என தெரிவித்தார்.
முன்னதாக, புதிய அரசு பொறுப்பேற்ற உள்ளதை முன்னிட்டு மணிப்பூரில் அமுலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. (a)

13 minute ago
21 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
36 minute ago
1 hours ago