Editorial / 2026 ஜனவரி 05 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
முதலை இழுத்துச் சென்ற நபரை தேடும் பணி மீண்டும் இரண்டாவது நாளாக ஆரம்பமாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்திற்கு உட்பட்ட ஆத்தியடிக்கட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை முதலை நபர் ஒருவரை இழுத்து சென்றிருந்தது.
இந்நிலையில் அன்றைய தினம் இரவு 10 மணி வரை தேடுதல் மேற்கொண்ட நிலையில் நிறைவடைந்த தேடுதல் நடவடிக்கையானது திங்கட்கிழமை (5) காலை மீண்டும் இரண்டாவது நாளாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பு அல் உஷ்வா தற்காப்பு குழுவினர் கல்முனை ஆழ்கடல் சுழியோடிகள் அமைப்பு மற்றும் ஒலுவில் மீனவர் முதலானோர் இணைந்து தேடுதல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து உள்ளனர்.
இதுவரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை என களப் பணியில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்துள்ளார்.
முதலை இழுத்துச் சென்ற நபர் ஒலுவில் பள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகிறது.மக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லும் போது அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .