Editorial / 2021 ஜனவரி 02 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் போதைப்பொருள் அடங்கிய பொதியொன்று மெகசின் சிறைச்சாலை மதிலுக்கு மேல் வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த பொதி வீசப்பட்ட போது, கடமையில் இருந்த ஜெயிலர் அதனை கண்டு, விரைந்து செயற்பட்டு பொதியை மீட்டெடுத்து சிறைச்சாலையின் உயர் அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.
அதற்குப் பின்னர் அதனை சோதனைக்கு உட்படுத்திய போது, கையடக்க தொலைபேசிகள் இரண்டு, அதற்கான சார்ஜர், ஐந்து சிம் அட்டைகள், தொலைபேசிக்கான பெற்றரிகள் இரண்டு, லைட்டர் இரண்டு, ஐஸ் போதைப்பொருள் அடங்கிய இரண்டு சிறு பொட்டலங்கள், கஞ்சா பொதி, புகையிலை பத்தும் இருந்துள்ளன.
அதன் பின்னர், அந்தப் பொதியை சிறைச்சாலை அதிகாரிகள் பொரளை பொலிஸாரிடம் ஒன்படைத்துள்ளனர்.
எனினும், அந்தப் பொதியை வீசியவர் யார் என்பது தொடர்பி்ல் இதுவரையிலும் அறியமுடியவில்லை எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
7 minute ago
14 minute ago
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
27 minute ago
36 minute ago