Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Freelancer / 2025 மே 24 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயிற்றங் கொடிக்கு குத்துவதற்காக பூவரசம் தடி வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த இராசமணி ஸ்ரீகாந்தன் (வயது 48) என்ற மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.
மேற்படி குடும்பத்தர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (22) பிற்பகல் பழைய பொலிஸ் நிலைய வீதி சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள வீட்டு வேலியில் பயிற்றைக் கொடிக்கு குத்துவதற்காக பூவரசம் தடி வெட்டியுள்ளார்.
இதன்போது நீண்டு வளர்ந்திருந்த பூவரசம் தாடி மின்சார கம்பி மீது தொடுகை ஏற்பட்டு அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நேற்று வெள்ளிக்கிழமை (23) யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.
சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையில் கடுமையான மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
59 minute ago