2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்​தவுக்கு விளக்கமறியலில்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி  நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (27) அன்று  உத்தரவிட்டுள்ளது.

பொதுஹெரவை பிரதேசத்தை சேர்ந்த இளைஞன்  ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், நிஷாந்த உலுகேதென்ன கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .