2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

முன்னாள் கடற்படை தளபதியின் விளக்கமறியல் நீடிப்பு

Simrith   / 2025 ஜூலை 30 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்னவை ஒகஸ்ட் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில், பொத்துஹெரவைச் சேர்ந்த ஒரு இளைஞர் காணாமல் போனது தொடர்பாக இந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டார்.

அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, ஜூலை 2020 முதல் டிசம்பர் 2022 வரை இலங்கை கடற்படையின் 24வது தளபதியாகப் பணியாற்றினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .