Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை இலங்கை பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா சமர்ப்பித்தார்.
இந்த வழக்கில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் (07), நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை ரத்து செய்யவும், முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது மனைவிகள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்யவும் கோரும் ஜனாதிபதி உரிமைகள் (ரத்து) சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
ஜூலை 31, 2025 வெளியிடப்பட்ட வர்த்தமானியில் இந்த முன்மொழியப்பட்ட சட்டம், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்கான உத்தியோகபூர்வ குடியிருப்புகள், மாதாந்திர கொடுப்பனவுகள், செயலக உதவி, போக்குவரத்து வசதிகள் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகளை முடிவுக்குக் கொண்டுவரும்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago