2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

மினுவாங்கொடை தலைவர் இராஜினாமா

Editorial   / 2025 டிசெம்பர் 31 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த மினுவாங்கொடை நகர சபையின் தலைவர் அசேல விக்ரமாராச்சி, மாநகர சபைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மினுவாங்கொடை நகர சபையில் புதன்கிழமை (31) அன்று  நடைபெற்ற சிறப்பு பொதுக் கூட்டத்தில், அவர் இவ்வாறு அறிவித்தார்.

மினுவாங்கொடை நகர சபை வரலாற்றில் தலைவர் ஒருவர் ராஜினாமா செய்வது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.

ஆறு மாதங்கள் என்ற மிகக் குறுகிய காலத்திற்குப் பிறகு, தான் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும், தனது ராஜினாமா எந்தவொரு அழுத்தத்தினாலும் எடுக்கப்பட்டது அல்ல என்றார்.

தனது ராஜினாமா குறித்து தனது கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் தலைவர் அசேல விக்ரமாராச்சி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X