2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

மின்வெட்டு தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு

J.A. George   / 2022 ஜனவரி 12 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  மின்சார துண்டிப்பு இடம்பெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, தொழில்நுட்பக் கோளாறு சீர்த்திருத்தப்பட்டுள்ளதால் முன்னர் அறிவிக்கப்பட்டதை போன்று மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று (12) மாலை 5.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில், சுமார் ஒரு மணிநேரத்திற்கு மின் வெட்டு அமுலாக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .