Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் நகர நுழைவாயில் பகுதியிலுள்ள ‘சதொச’ வளாகத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளுக்குரியவர்கள் யாரென்பதைக் கண்டறிவதற்காக, அவ்வெலும்புக் கூடுகளை, ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்று, உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரி, வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களையும் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து, நேற்றைய தினம் (12) போராட்டமொன்றை நடத்தினர்.
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக, நேற்றுப் புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில், இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்பதற்காக, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 மாவட்டங்களிலிருந்து மக்கள் வருகை தந்திருந்தனர்.
குறிப்பாக, காணாமல் ஆக்கப்பட்ட, கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள், இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வாறு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பாக, ஐ.நா பொறுப்பேற்று, உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் இந்தப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் யார்? புதைத்தவர்கள் யார்? என்பது தொடர்பான உண்மைத் தகவல்கள் வெளியிடப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.
அத்துடன், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினை காரணமாக, இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதில் தமக்கு நம்பிக்கையில்லை என்றும் எனவே, மனித எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வுகளையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துவரும் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றும், ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இதேவேளை, போராட்டத்தின் இறுதியில், ஐ.நாவுக்கு எழுதப்பட்ட மகஜரொன்று, ஏற்பாட்டுக் குழுவினரால் வாசிக்கப்பட்டதோடு, அதை, ஐ.நாவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
4 hours ago