Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 பெப்ரவரி 22 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறிய வயதான மூன்று பிள்ளைகளுடன் வந்த தந்தையொருவர், மனைவியை அழைத்து வா, இல்லையேல் இந்த மூன்று பிள்ளைகளையும் பொறுப்பெடுத்துக் கொள் எனக்கூறி, அம்மூவரையும் அவ்விடத்திலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.
ஒரு வயது, 6 வயது மற்றும் 10 வயதான பிள்ளைகளையே அவர், விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.
இந்த சம்பவம், தங்கல்ல வெளிநாட்டு வேலை பணியக காரியாலயத்திலேயே இடம்பெற்றுள்ளது. பிள்ளைகள் மூவரும் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று பிள்ளைகளின் தயார், கடந்தவருடம் ஜூலை மாதம், வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். அவ்வாறு சென்றிருக்கும் தன்னுடைய மனைவியையே மீள அழைத்துவருமாறு அவரது கணவன் இதற்கு முன்னரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலங்கொட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட அவர், வயது குறைந்த பிள்ளைகள் மூவரையும் அலுவலகத்துக்கு அழைத்துவந்து. அங்கிருந்து தப்பியோடிவிட்டார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago