Editorial / 2026 மார்ச் 24 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஆர்.லெம்பேட்
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிக்கும், மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் (MSEDO) பணிப்பாளரும் சிவில் சமூகச் செயற்பாட்டாளருமான ஜாட்சன் பிகிராடோவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று திங்கட்கிழமை (23) மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியின் வட மாகாண விஜயத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் IOM அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தின் பிரதான நுழைவாயிலான மன்னார் பாலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி குறித்து இதன்போது விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.
"நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இல்லாத இவ்வாறான ஒரு தனித்துவமான சோதனைச் சாவடி, மன்னார் மக்களை மட்டும் விசேடமாகக் கண்காணிப்பது போன்ற உணர்வைத் தருகிறது. இது மக்களின் அடிப்படை மனித உரிமை மீறலாகும்" எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
இச்சோதனைச் சாவடி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் ஐ.நா. பிரதிநிதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
2. பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய சட்டங்கள்:
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இச்சட்டங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள், தபால் அட்டைப் பிரச்சாரங்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துச் சேகரிப்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கை ஒன்றும் இதன்போது ஐ.நா. பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டது.
மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் (MSEDO) சார்பில் அதன் தலைவர் ஜே. யாட்சன் பிகிறாடோ இந்த அறிக்கையை உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பித்தார்.
10 minute ago
20 minute ago
27 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
27 minute ago
31 minute ago