Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 15 , மு.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின் தடை தொடர்பில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று அறிவிக்குமாறு அரசாங்கத்திடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த போதும் அதற்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்காமையினால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஒழுங்குப் பிரச்சினைகளைகளை எழுப்பியே அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.
எனினும் தற்போது உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாகவே கலந்துரையாடுவதற்காக குறிப்பிட்ட நேரத்திற்கே பாராளுமன்றம் கூடியிருப்பதால் வேறு விடயங்கள் தொடர்பில் கதைக்க நேரமில்லை என்று சபாநாயகர் மற்றும் சபை முதல்வர் ஆகியோர் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது.
முதலில் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகையில்,
சில நிமிடங்களில் முடிப்பதற்காக இந்த பாராளுமன்றத்தை கூட்டவில்லை. எங்களுக்கு கருத்து கூற நேரம் தாருங்கள். எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் அந்த வாய்ப்பை வழங்குங்கள் மக்கள் சில விடயங்களுக்கு பதிலை எதிர்பார்க்கின்றனர். இந்த வார இறுதியில் மின்வெட்டு இடம்பெறுமா? இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்றார்.
இவ்வேளையில் எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை வேறு விடயங்களுக்கு பயன்படுத்துகின்றீர்கள். உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் இப்போதே தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய வேண்டும். விவாதத்திற்கு காலமும் வழங்கும் என்றார்.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்த்தி ஏதோ கூற முயன்ற போது, குறுக்கிட்ட சபை முதல்வர், நீங்கள் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து காலத்திற்கு பொருத்தமான விடயத்தையே பேச வேண்டும். அதனை விடுத்து எல்லாவற்றையும் கூற முடியாது என்றார்.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து ஆசனத்தில் இருந்து எழுப்பிய நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பி எழுந்தனர்.
இதன்பின்னர் தமது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைக்க எதிர்க்கட்சித் தலைவருக்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார்.
இதன்போது கடந்த வாரத்தில் ஏற்பட்டதை போன்று இந்த ஞாயிற்றுக்கிழமையும் நாடு முழுவதும் திடீர் மின் தடை ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும், இதனை நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் மின்சக்தி அமைச்சு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இவரை தொடர்ந்து எதிர்கட்சி பிரதம கொரடாவான கயந்த கருணாதிலக கூறுகையில்,
மின்வெட்டு தொடர்பில் கதைக்கும் போது இந்த விடயம் இந்த நேரத்தில் பொருத்தமானது அல்ல என்று சபை முதல்வர் கூறியுள்ளார். ஆனால் மக்கள் பார்த்தக்கொண்டு இருக்கின்றனர். இன்று இவ்வளவு செலவழித்து பாராளுமன்றம் கூடியுள்ள நிலையில் மின்வெட்டு தொடர்பில் மின்சார அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் தனது கருத்தை முன்வைத்த மின்வெட்டு தொடர்பான பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.
எனினும் அரசாங்கம் அது தொடர்பில் எந்த பதிலையும் வழங்கவில்லை. இவ்வேளையில் பாராளுமன்ற தினப் பணிகள் தொடர்பான சில விடயங்களை அறிவித்த சபை முதல்வர், அதன்பின்னர் பாராளுமன்றத்தை 17ஆம் திகதி முற்பகல் 10.30 மணிவரையில் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார். இதன்படி மீண்டும் பாராளுமன்ற குறித்த தினத்தில் கூடும் என்று சபாநாயகர் அறிவித்து சபையை ஒத்திவைத்தார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago