2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மயிரிழையில் தப்பிய பயணிகள்

Janu   / 2023 நவம்பர் 19 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம்- மன்னார் பாதையூடாக பயணித்த தனியார் பேருந்து போட்டிப் போட்டு முழங்காவில் பேருந்து  முந்த முயன்ற வேளை, நிலைதடுமாறி அருகில் இருந்த  மரத்தில் மோதவிருந்த நிலையில் நூற்றுக்கணக்கான பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் சனிக்கிழமை (18) யாழ்ப்பாணம் முழங்காவில் பிரதான வீதியில் இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து மதியம் 3 மணியளவில் புறப்பட்ட தனியார் பேருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு முழங்காவில் முக்கொம்பன் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், பின்னால் வந்த மற்றைய தனியார் பேருந்து சாரதியின் செயற்பாட்டால் நிலை தடுமாறி உள்ளது.

இதன் காரணமாக நிலை தடுமாறிய பயணிகளுடன் மன்னார் நோக்கி வந்த தனியார் பேருந்து  அருகில் உள்ள மரத்தில் மோதும் விதமாகச் சென்ற நிலையில் மரத்தைச் சூழ இருந்த மணல் திட்டு காரணமாக விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டதுடன், பேருந்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

எஸ்.றொசேரியன் லெம்பேட்  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X