2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மரக்கிளையில் சிக்கியிருந்த சிசு மீட்பு

Editorial   / 2018 டிசெம்பர் 25 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், கடந்த வௌ்ளிக்கிழமை பெய்த அடைமழையை அடுத்து ஏற்பட்ட வௌ்ளத்தினால் சிக்குண்டவர்கள் பலர் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

வயல் காவலுக்குச் சென்றவர்களும் உதவிப் பணிகளுக்குச் சென்றவர்களும் வீடுகளில் இருந்தவர்களும் அந்த வெள்ளத்தில் சிக்கியிருந்தனர்.

வீடுகளுக்குள் சிக்கித் தவித்தவர்கள், மரங்களில் ஏறித் தப்பியிருந்தவர்களென பலரையும் கடற்படையினர் காப்பாற்றினர். அவர்களை, படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசேர்த்தனர்.

இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கிய, பாரிய மரக்கிளையொன்றில் சிக்கியிருந்த பிறந்து சில நாள்களேயான சிசுவும், தாயும் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .